முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிறப்புடையது

தெரிந்து கொள்வோம் (LET'S KNOW): வேப்பம்பூ பலன்கள்(NEEM FLOWER BENIFITS)

தெரிந்து கொள்வோம் (LET'S KNOW): வேப்பம்பூ பலன்கள்(NEEM FLOWER BENIFITS) :  வேப்பம்பூவின் நன்மைகள் என்ன? வேப்பம்பூ மனிதனுக்கு இயற்கையால் அளிக்கப்பட்ட ஒரு அற்புதமான நன்கொடை ஆகும்."அசாடிராக்டா இண்டிகா"என அழை...

வெங்காயச் சட்னி

 

வெங்காயச் சட்னி ஒரு சுவையான ஒரு சைட் டிஷ். தோசை, இட்லி, சப்பாத்தி, ரொட்டி, முதலியவற்றுக்கு பக்கத்துணையான ஒன்று.செய்வதும் மிக எளிது.

தேவையான பொருட்கள்:

சின்ன வெங்காயம்  15

காய்ந்த மிளகாய்  3

உப்பு, புளி, வெல்லம் தேவையான அளவு.

பெருங்காயம் ஒரு சிட்டிகை.

தாளிக்க: கடுகு, தேங்காய் எண்ணெய் 3 ஸ்பூன்.


எடுத்த மூன்று ஸ்பூன் தேங்காய் எண்ணெயில் ஒரு ஸ்பூனை கடாயில் ஊற்றி

கடுகு போட்டு பொரிந்தஉடன் அதனுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.காய்ந்த மிளகாய்களையும் சேர்த்து வதக்கவும்.அந்த சூட்டிலேயே பெருங்காயம் சேர்க்கவும். பொன்னிறமானதும் அதனுடன் உப்பு, புளி, வெல்லம் இவை சேர்த்து மிக்ஸியில் தண்ணீர் விடாமல் அரைக்கவும்.

மீண்டும் கடாயை வைத்து 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றிகடுகு தாளித்து அரைத்து வைத்துள்ள சட்னியில் கொட்டவும்.

சுவையான வெங்காயச் சட்னி தயார்!

இன்னொரு வகை பெரிய வெங்காயம் சேர்த்தும் செய்யலாம்.

தேவையான பொருட்கள்:

பெரிய வெங்காயம் 2

காய்ந்த மிளகாய் 3

கடலைபருப்பு 1 ஸ்பூன்

தேங்காய் கால் மூடி 

கடுகு தாளிக்க

எண்ணெய் 3 ஸ்பூன்

உப்பு, புளி, தேவையான அளவு.

 எண்ணெய் விட்டு கடுகு தாளித்து கடலைப்பருப்பையும் போடவும்பெரிய வெங்காயத்தை வதக்கியபின் வரமிளகாய் தேங்காய் சேர்த்து இன்னும் வதக்கி உப்பு, புளி சேர்த்து ஆறியபின் மிக்ஸியில் அரைக்கவும்.

சுவையான சட்னி தயார்.







கருத்துகள்

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்