உளுந்தங்களி செய்வது எப்படி.....
முதலில் உளுத்தங்களி பொடி செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையான பொருள்கள்
கருப்பட்டி - 500 கிராம்
பச்சரிசி - 100கிராம்
முழு கருப்புஉளுந்து - 100 கிராம்
மாப்பிள்ளை சம்பா அரிசி 100 கிராம்
கருப்புக் கவுனி அரிசி 100 கிராம்
நெய் - 3 மேஜைக்கரண்டி
நல்லெண்ணெய் - 50 மில்லி.
செய்முறை -
தோல் உளுந்து 12 மணி நேரம் ஊறவைத்துமுளை கட்டவும். கருப்பு கவுனி,மாப்பிள்ளை சம்பா இரண்டு அரிசிகளையும் 12 மணிநேரம் ஊற வைத்து அனைத்தையும் வெயிலில் காய வக்கவும்.
பச்சரிசி இரண்டு மணி நேரம் ஊறவைத்து வெயிலில் ஒரு மணி நேரம் காய வைத்து வாணலியில் எல்லாவற்றையும் வறுக்கவும்.பிறகு எல்லாவற்றையும் மிக்ஸ்சியில் திரித்துக் கொள்ளவும்.
கருப்பட்டியை பொடித்துக் கொள்ளவும்.
அடுப்பில் அடிக்கனமான பாத்திரத்தை வைத்து தண்ணீர் ஊற்றி பொடித்து வைத்துள்ள கருப்பட்டியை போட்டு பாகு காய்ச்சவும். அடுப்பை சிம்மில் வைத்து பாகு காய்ச்சவும்.
கருப்பட்டி பாகை வடிகட்டியில் ஊற்றி வடித்துக் கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து வடி கட்டிய கருப்பட்டி பாகு மற்றும் பாதி அளவு நெய் சேர்த்து கொதிக்க விடவும்.
கொதிக்க ஆரம்பித்ததும் களி மாவை ஒரு குழம்பு கரண்டி வீதம் எடுத்து பாகின் மேல் தூவி கை விடாமல் கிளற வேண்டும்.
இவ்வாறு மீதமுள்ள மாவையும் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கை விடாமல் கிளற வேண்டும்.
கெட்டியாக மாவு சுருண்டு வரும் போது மீதமுள்ள நெய், நல்லெண்ணெய் ஊற்றி கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
சுவையான உளுந்தங்களி ரெடி.
குறிப்புக்கள் -
இந்த களி மாவை அதிகம் செய்து வைத்துக்கொண்டு தேவையான பொழுது உபயோகப்படுத்திக் கொள்ளலாம். முழு கருப்பு
உளுந்துக்கு பதிலாக உடைத்த தோல் உளுந்தும் உபயோகிக்கலாம்.
உளுந்தங்களி குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. இளைத்த குழந்தைகள் உடல் தேறும். 5 மாதக் குழந்தைகளுக்கு கஞ்சியாக வைத்துக்கொடுக்கலாம்.
கர்ப்பிணிப் பெண்கள்
இந்தக் கஞ்சியையோ களியையோ எடுத்துக் கொள்ளும்போது கர்ப்பத்தில் உள்ள குழந்தை எடை கூடும்.
ஆண், பெண் அனைவருக்கும் கை கால் வலி, உடல்வலி மூட்டுவலி க்கு இந்தக் கஞ்சி அல்லது களி சாப்பிட்டால் படிப்படியாக குணமாவதைக்காணலாம்.
இந்த அளவு பொடி 2,3மாதங்களுக்கு வரும். இதில் ஒரு 100 கிராம் அளவுக்கு மாவு எடுத்து களி செய்தால் 5 பேர் சாப்பிடலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக