முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிறப்புடையது

தெரிந்து கொள்வோம் (LET'S KNOW): வேப்பம்பூ பலன்கள்(NEEM FLOWER BENIFITS)

தெரிந்து கொள்வோம் (LET'S KNOW): வேப்பம்பூ பலன்கள்(NEEM FLOWER BENIFITS) :  வேப்பம்பூவின் நன்மைகள் என்ன? வேப்பம்பூ மனிதனுக்கு இயற்கையால் அளிக்கப்பட்ட ஒரு அற்புதமான நன்கொடை ஆகும்."அசாடிராக்டா இண்டிகா"என அழை...

பச்சை மிளகாய் தொக்கு!

 பச்சை மிளகாய் தொக்கு!

தேவையான பொருட்கள்:

பச்சை மிளகாய் --- கால் கிலோ
பூண்டு  - 10 பல்
நல்லெண்ணெய் 150 மில்லி
வறுத்து அரைக்க--கடுகு 2 ஸ்பூன்,வெந்தியம் 2 ஸ்பூன், பெருங்காயம் 1 ஸ்பூன்
கடுகு அரை ஸ்பூன், கருவேப்பிலை 2 ஈர்க்கு
மஞ்சள் பொடி  அரை ஸ்பூன். புளி -எலுமிச்சம்பழ அளவு
வெல்லம் - 2 ஸ்பூன்
கல் உப்பு தேவையான அளவு.



 பச்சை மிளகாய் தொக்கு நம் வீட்டில் எளிமையான முறையில் செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க..
ஒரு அகலமான கடாயில் மூன்று தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடு படுத்த வேண்டும். கடுகு, கருவேப்பிலை போட்டு தாளித்து இதில்  15 பச்சை மிளகாயை ஒரு பக்கம் மட்டும் நீளமாக நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பச்சை மிளகாய் வதங்கும் நேரத்தில் மிளகாய் நன்கு வதங்கிய பிறகு  பச்சை மிளகாய் தொக்கிற்கு தேவையான அளவு கல் உப்பு சேர்த்து கிளறிக்கொள்ள வேண்டும்.

அடுத்ததாக 250 கிராம் புளி நன்கு ஊற வைத்து பிசைந்து கெட்டியான புளி தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும். புளி ஊற்றி மஞ்சள் பொடி, வறுத்தரைத்த கடுகு,வெந்தியம்,பெருங்காயப்பொடி சேர்த்து நன்கு கொதிக்க விடவும், வெல்லத்தையும் சேர்க்கவும்
. இறுதியாக கடாயின் ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வந்தால் பச்சை மிளகாய் தொக்கு தயார்.
இந்த தொக்கு வைத்து அருமையாக இட்லி, தோசை, சப்பாத்தி சூடான சாதம் என அனைத்திற்கும் வைத்து சாப்பிடலாம்.

💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்