முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிறப்புடையது

தெரிந்து கொள்வோம் (LET'S KNOW): வேப்பம்பூ பலன்கள்(NEEM FLOWER BENIFITS)

தெரிந்து கொள்வோம் (LET'S KNOW): வேப்பம்பூ பலன்கள்(NEEM FLOWER BENIFITS) :  வேப்பம்பூவின் நன்மைகள் என்ன? வேப்பம்பூ மனிதனுக்கு இயற்கையால் அளிக்கப்பட்ட ஒரு அற்புதமான நன்கொடை ஆகும்."அசாடிராக்டா இண்டிகா"என அழை...

ரசகுல்லா



s="post-header-line-1">
தேவையான பொருட்கள்


பசும்பால்----------------------- 1லி
சர்க்கரை-----------------------500கிராம்
எலுமிச்சம்பழம்--------------அரை மூடி
பன்னீர்--------------------------1 ஸ்பூன்
மைதா--------------------------1 ஸ்பூன்
டைமண்ட் கல்கண்டு------50 கிராம்

செய்முறை

பசும்பாலை  காய்ச்சவும்.காய்ந்தவுடன் அதில் எலுமிச்சம்பழத்தைப் பிழிந்துவிடவும் பால் திரிந்துவிடும்.அதை துணியில் வடிகட்டி குளிர்நீரில் வைத்தால்உடனே குளிர்ந்துவிடும்.பிழிந்து எடுத்தால் பனீர் தயார்.பனீர்  கடினமாகவும் இல்லாமல் மெதுவாகவும் இல்லாமல்  இருக்கவேண்டும்.
அதிக ஈரம் இருந்தால் துணியில் ஒற்றி எடுக்க வேண்டும்.

பனீரை மிக்ஸியில் சிறிது அடிக்கவும்.மைதா1 ஸ்பூன்  சேர்த்து பிசையவும்.  உருட்டினால் உடையாத அளவுக்கு பனீர் பதமாக இருக்க வேண்டும்.


சர்க்கரைப் பாகு வைக்கவும்,பனீரை ஒரு டைமண்ட் கல்கண்டு உள்ளே வைத்து
உருட்டவும்.

கால் பாகம் சர்க்கரைப்பாகு எடுத்து அதில் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க வைக்கவும்.அதில் பனீர் உருண்டைகளைப்போட வேண்டும்.அரை மணி நேரம்
சீரான தணலில் வேக வைக்க வேண்டும். ஒரு டம்ளரில் சிறிது சர்க்கரைப்பாகு எடுத்து நீர் சேர்த்து வைக்கவும்.அதை ரசகுல்லா மேல் எடுத்து 5 நிமிடங்களுக்கு ஒருமுறை விட வேண்டும்.அரை மணி கழித்தபிறகு உருண்டைகளை எடுத்து,பன்னீர் சேர்த்த சர்க்கரைப்பாகில் போடவும். 10 மணி நேரம் கழித்துப் பரிமாறவும்.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்