சிறப்புடையது
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
தக்காளி ஊறுகாய்
இது தக்காளி மலிவாகக் கிடைக்கும் காலம். எனவே ஊறுகாயாக செய்து தக்காளியைப் பதப்படுத்தி வைத்துக்கொண்டால் பல மாதங்களுக்கு இட்லி, தோசை சப்பாத்தி ,தயிர்சாதம் போன்ற பல சிறஅறுண்டிகளுக்கு பக்கத்துணையாகப் பயன்படுத்தலாம்.
தேவையான பொருட்கள்:
தக்காளி - 2 கிலோ
மிளகாய்த்தூள் - 50 கிராம்
பூண்டு 10 பல்
கடுகு - 3 ஸ்பூன்
வெந்தயம் 2 ஸ்பூன்
பெருங்காயம் அரை ஸ்பூன்
எண்ணெய் 200 மில்லி
வெல்லம் 2 ஸ்பூன்.
கடுகு 2 ஸ்பூன், வெந்தயம் 1 ஸ்பூன் வறுத்து பொடியாக அரைத்து வைக்கவும்.
மீதி இருக்கும் கடுகு ,வெந்தயம் தாளிக்க வைத்துக்கொள்ளலாம்.பூண்டு ஒன்றிரண்டாக தட்டி வைக்கவும்.
செய்முறை:
தக்காளியை நன்கு கழுவி ஈரம்போக உலர்த்தவும். 3 லிட்டர் தண்ணீரை அடுப்பிலேற்றிக் கொதிக்க வைக்கவும். கொதிநிலை வந்தவுடன் தக்காளிகளை அதில் போடும் 2 நிமிடங்களில் தோல் வெடித்து வரும் அப்போது அடுப்பை அணைத்து ஆறியவுடன் தக்காளிகளை தோல் உரித்துக் கொள்ளவும்.பிறகு உரித்த தக்காளிகளை மிக்ஸியில் அரைத்து வடி கட்டவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காயவிடவும். பிறகு கடுகு வெந்தயம் போட்டு தாளிக்கவும்.பெருங்கா.ம் சேர்க்கவும்.ஒன்றிரண்டாக தட்டிய பூண்டு பல்லைப்போட்டு பொன்னிறமாக வறுக்கவும்.. பிறகு மிளகாய்ப்பொடியை சேர்க்கவும்..வறுத்தரைத்த கடுகு,வெந்தய பொடியை சேர்க்கவும்.வெல்லம் சேர்க்கவும்.அடுத்தாற்போல் தக்காளியை சேர்த்துஎண்ணய் பிரிந்து வரும் வரை கிளறிக்கொண்டே இருக்கவும். எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கி ஆற வைத்து காற்றுப்புகாத பாட்டில்களில் சேமித்து வைக்கவும்.சரியான பக்குவத்தில் செய்தால் ஆறு மாதங்களுக்குக் கெட்டுப்போகாது.
Tomato pickle:
This is the time when tomatoes are cheap. So, if you pickle and preserve tomatoes, you can use them as a side dish for many delicious dishes like idlis, dosa, chapati, curd rice, etc. for many months.
Ingredients:
Tomatoes - 2 kg
Chilli powder - 50 grams
10 cloves of garlic
Mustard - 3 spoons
Fenugreek 2 spoons
Half a spoon of turmeric
200 ml of oil
Jaggery 2 tablespoons.
Roast 2 tablespoons of mustard and 1 tablespoon of fenugreek and grind them into a powder.
You can keep the remaining mustard and fenugreek for seasoning. Grate the garlic and set aside.
Recipe:
Wash the tomatoes well and pat dry. Bring 3 liters of water to a boil on the stove. Once it reaches boiling point, add the tomatoes. The skin will burst within 2 minutes. Then turn off the stove and peel the tomatoes once they cool down. Then grind the peeled tomatoes in a mixer and strain it.
Pour oil in a pan and heat it. Then add mustard and fenugreek and season it. Add ginger. Add chopped garlic cloves and fry until golden brown. Then add chili powder. Add fried mustard and fenugreek powder.And add jaggery. Next add tomatoes and keep stirring until the oil separates. Once the oil separates, remove it and let it cool and store in airtight bottles. If made at the right maturity, it will not spoil for six months.
பிரபலமான இடுகைகள்
வெஜிடபுள் கட்லெட்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
முடக்கத்தான் கம்பு தோசை
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
ரசகுல்லா
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
ஆனியன் சமோசா
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
வெல்லப்பிட்டு
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
சில்லி கார்லிக் எக்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
Chilly Baby corn
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்

கருத்துகள்
கருத்துரையிடுக